சட்டவிரோத பதிவுகளை தடுக்க பேஸ்புக் நிறுவனம் செய்த செயல்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் பேஸ்புக் உபயோகப்படுத்துபவர்களின் வெறுப்புக்குரிய சட்டவிரோத பதிவுகளை கண்காணிக்க பேஸ்புக் நிறுவனம் நாட்டில் இரண்டாவது புதிய அலுவலகத்தை திறந்துள்ளது.

ஜேர்மனியில் கடந்த யூன் மாதம் புதிய சட்டம் வந்தது, அதன்படி பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பதியப்படும் வெறுப்புக்குரிய சட்டவிரோத பதிவுகளை ஒரு வாரத்துக்குள் நீக்காவிட்டால் 50 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதை கண்காணிக்க ஜேர்மனியில் ஏற்கனவே ஒரு அலுவலகத்தை திறந்துள்ள பேஸ்புக் நிறுவனம் எசன் நகரில் நேற்று தனது இரண்டாவது அலுவலகத்தை திறந்துள்ளது.

500 ஒப்பந்த ஊழியர்கள் இங்கு பணிக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பேஸ்புக் பதிவுகளை இவர்கள் மதிப்பாய்வு செய்வார்கள்.

CCC என்ற தனியார் நிறுவனத்துக்காக புதிய ஊழியர்கள் வேலை செய்வார்கள் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பெர்லினில் ஒரு அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1200-ஐ தாண்டும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்