பிறந்து 1 மாதமே ஆன குழந்தைக்கு 7 பற்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

குஜராத் மாநிலத்தில் பிறந்து 1 மாதமே ஆன பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் 7 பற்கள் அகற்றப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்கு பின்னர் தான் கீழ்ப்பகுதியில் 7 பற்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழந்தையால் தாய்ப்பால் குடிக்க முடியவில்லை, இதனைத் தொடர்ந்து மருத்துவர் ரமாதிரியை அணுகியுள்ளனர்.

அவர் இரண்டு கட்டமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் வாயில் இருந்த பற்களை அகற்றியுள்ளார், முதல் அறுவை சிகிச்சையின் போது 4 பற்களையும், இரண்டாவது அறுவை சிகிச்சையின் போது 3 பற்களையும் நீக்கியுள்ளார்.

மருத்துவர் கூறியதாவது, இது சாதாரண ஒன்று தான், இந்த பற்களின் வளர்ச்சி நீண்ட நாட்களுக்கு இருக்காது, எனவே இதனை நீக்கியாக வேண்டும் இல்லையென்றால் குழந்தைக்கு பற்கள் வளர்வதில் பிரச்சனை இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்