தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை: புகைப்படம் வெளியீடு

Report Print Gokulan Gokulan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் தேமுதிக தலைவர் விஜயக்காந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தைராய்டு பிரச்சினை, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார் விஜயகாந்த். இதற்கான மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தைராய்டு பிரச்சினை காரணமாக கழுத்து பகுதி வீக்கத்துடனே இருப்பதால் அரசியல் பணிகளுக்கிடையே மருத்துவர்களின் ஆலோசனைபடி அவ்வப்போது ஒய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு விமானம் மூலம் சென்ற விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் நோயாளிகள் அணியும் ஆடையுடன் காணப்படும் அவரை, அவரது மனைவி பிரேமலதா உடனிருந்து கவனித்து வருகிறார்.

இன்னும் சில தினங்களில் சிகிச்சையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பவுள்ள விஜயகாந்த் முன்பை விட கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்