பனி படர்ந்த பிரதேசங்களில் கண்டெடுக்கப்படும் பல வருடங்களுக்கு முன்னர் இறந்த உயிரினங்களின் சுவடுகள் பெரும்பாலும் அழிவடையாத நிலையில் கிடைக்கப்பெறும்.
ஆனால் 50,000 வருடங்களுக்கு முன்னர் இறந்ததாக கருதப்படும் சிங்கக்குட்டி ஒன்று அழிவடையாத நிலையில் முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது ரஷ்யாவின் துறைமுக நகரம் என அழைக்கப்படும் Yakutsk பகுதியில் இருந்து விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குறித்த சிங்கக்குட்டியானது இறந்ததற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என தெரிவித்த விஞ்ஞானிகள் அது 20,000 தொடக்கம் 50,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இறந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதன் நீளம் 45 சென்ரி மீற்றர்களாகவும், எடை 4 கிலோ கிராம்களாகவும் உள்ளது.
இதன் வெளிப்புறப் பகுதியில் எவ்விதமான காயங்களும் இருக்கின்றமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.