சீனாவில் பெண் ஒருவர் பணத்திற்காக நாயை ஆறாவது மாடியில் இருந்து தூக்கி வீசியதால், அந்த நாய் பரிதாபமாக உயிரிழுந்துள்ளது.
சீனாவின் Sichuan மாகாணத்தின் Chengdu பகுதியைச் சேர்ந்தவர் வூ. இவர் ஹீ என்ற பெண் வளர்த்து வந்த லயன் என்ற நாயை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் கோர்கி வகையைச் சேர்ந்தது.
இதற்கிடையில் ஹீ கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் திகதி நாய் காணமல் போயுள்ளது என்று கூறியுள்ளார். அதன் பின் நாய் இவரிடம் இருப்பதை அறிந்து அவர் உடனடியாக வந்து தான் ஆசையாக வளர்த்து வந்த நாயை கேட்டுள்ளார்.
ஆனால் அவரோ நாயை கொடுக்காமல், அதற்கு பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க வில்லை என்றால் நாயை அடித்து கொன்று சாப்பிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இப்படி இருவருக்கும் வாக்கு வாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று வூ, அந்த நாயை ஆறாவது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.
கீழே விழுந்த நாய் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிருக்கு போராடியுள்ளது. இதைக் கண்ட முன்னாள் உரிமையாளர் என்று கூறப்படும் ஹீ நாயை எடுத்து அழுத படி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு நாயோ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேலும் இத்தனை நாட்கள் நாயை வளர்த்தற்காக பணம் கேட்டதாகவும், அப்போது இவர் கொடுக்க மறுத்ததாகவும், இதனாலே நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது என்று கூறப்படுகிறது.