செய்தி
ஐநாவின் இரகசிய அறிக்கை: முக்கிய பகுதிகள் பல கறுப்பு மையினால் அழிப்பு! (அறிக்கை இணைப்பு)
[ வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012, 07:32.04 AM GMT ]

இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

128 பக்கங்களைக் கொண்ட இந்த இரகசிய அறிக்கையில், பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், ஐநா தனது பொறுப்பிலிருந்து தவறியமை குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், யுத்த வலயத்தில் சிக்குண்ட பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை என்றும், மிகமோசமாக பரந்தளவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிடவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு பயந்தே இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட தகவல்கள் மிக முக்கியமானவையாக இருக்கக் கூடும் எனவும் இந்த விடயத்திலும் ஐ.நா தவறிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா.வின் இரகசிய அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்துங்கள்


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 12:00.24 AM ]
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
[ Friday, 24-05-2013, 11:59.14 PM ]
மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
[ Friday, 24-05-2013, 11:49.56 PM ]
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலுள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க வகையில் நேற்று மாலையில் இருந்து பால் வடிகின்றது.
[ Friday, 24-05-2013, 10:17.51 PM ]
’’கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 09:14.25 PM ]
நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
[ Friday, 24-05-2013 19:34:02 GMT ]
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.
[ Friday, 24-05-2013 10:45:18 GMT ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
[ Friday, 24-05-2013 19:54:44 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.