சுவிற்சர்லாந்தில் சிறப்பிக்கப்பட்ட கலை நிகழ்வு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிற்சர்லாந்து அறிவு ஆய்வாளர் வளாகத்தினால் அண்மையில் கலை நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது நாடகம், பட்டிமன்றம், கண்ணம்மா என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் பரிசளிப்பு என்பன நடைபெற்றன.

தமிழகத்தில் கொய்யம்புத்துாரில் ஆச்சிரமம் நடத்திக் கொண்டிருக்கும் மனவள செயற்பாட்டாளர் சிறப்பாளர் பாலச்சந்தின் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்த நிகழ்வில் சூரிச் செல்வராசா ஆசிரியர் சிறப்புரை ஆற்றியதுடன், சித்தபீட யோகராசா தலைமையுரையையும், பொன்னம்பலம் முருகவேள் சிற்றுரையையும் ஆற்றியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விஞ்ஞானம் அழிவுப்பாதையிலா, ஆக்கப்பாதையிலா செல்கின்றது என்ற தலைப்பில் பட்டிமன்றமும், நாடகங்கள் தாயக அவலங்கள், பெண்கள் குடும்ப உறவுகளுக்குள்ளே கூட தொல்லைகளை அனுபவித்து ஆச்சிரமங்களில் வாழவேண்டிய நிலை உருவாகின்றமையை எடுத்துக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தன.

இதன் பின்னர், துரைராசா சுவேந்திரராசாவின் கண்ணம்மா என்ற 24 சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத்தொகுப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்