கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் கொள்ளை: அதிர்ச்சியில் பொலிசார்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்து கோடிக்கணக்கனான விலையுள்ள ஆடைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Zug மாகாணத்தில் உள்ள Bahnhofstrasse நகரில் Herr Globus என்ற வணிக வளாகம் இயங்கி வருகிறது.

இந்த வணிக வளாகத்தில் நேற்று அதிகாலை 7 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.

கதவினை உடைத்துவிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆடைகளை மூட்டைகளாக கட்டி வெளியே கொண்டு வந்துள்ளனர்.

பின்னர், வெளியே தயார் நிலையில் நிறுத்தியிருந்த வாகனத்தில் மூட்டைகளை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் வணிக வளாகத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, கொள்ளை போன ஆடைகளின் மதிப்பு ஒரு லட்சம் பிராங்க்(1,60,65,419 இலங்கை ரூபாய்) எனக்கூறப்படுகிறது.

கொள்ளையர்கள் வணிக வளாகத்தில் வேறெந்த தாக்குதல்களிலும் ஈடுப்படவில்லை.

கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள ஆதாரங்களை சேகரித்துள்ள பொலிசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.

மேலும், கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ளூமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்