சுவிற்சர்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் வீட்டில் சுவிஸ் நாட்டு தூதுவர்கள்

Report Print Mohan Mohan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Promotion

சுவிற்சர்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் வீட்டிற்கு சுவிஸ் நாட்டு தூதுவர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இன்று பிற்பகல் அங்கு சென்ற பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துள்ளதுடன் துயர்பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சுவிஸ் நாட்டு தூதுவர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,

சுவிற்சர்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் தொடர்பில் இது வரையில் இலங்கை சுவிஸ் தூதரகத்திற்கு மேலதிக விடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை, இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒழுங்கான முறையில் நடைபெறும் என உறுதியளித்துள்ளார்கள்.

தந்தையை, சகோதரனை, கணவனை இழந்து தவிக்கும் உங்களின் வலிகளை புரிந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


You May Like This Video?

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்