சாலையின் அருகே திடீரென்று பற்றி எரிந்த கார்: அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுனர்கள்

Report Print Santhan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares

சுவிட்சர்லாந்தில் நின்று கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் திடீரென்று பற்றி எரிந்ததால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Winterthur பகுதியில் உள்ள A1 சாலைக்கு அருகே உள்ளூர் நேரப்படி காலை 07.45 மணிக்கு நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது.

அது எரிந்த சில நொடிகளிலே அருகில் இருந்த வாகனம் ஒன்று பற்றி எரிந்துள்ளது. இதனால் அவ்வழியே வாகனத்தில் சென்ற ஓட்டுனர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

இதில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை எனவும் எதனால் தீப்பற்றியது என்பது குறித்து தெரியவில்லை எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இதில் இரண்டுமே கார் இல்லை எனவும் ஒன்று காரை ஏற்றிக் கொண்டு வந்த வேன் எனவும் மற்றொன்று கார் எனவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்