பிரித்தானியாவின் மோசமான விமான நிலையம் எது? வெளியான சர்வே முடிவுகள்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

லண்டனில் அமைந்திருக்கும் Luton விமான நிலையம் தான் பிரித்தானியாவிலேயே மோசமான விமான நிலையம் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் நுகர்வோர் குழு, அங்கு அமைந்திருக்கும் மோசமான மற்றும் சிறந்த விமான நிலையங்கள் எது என்ற கருத்துக்கணிப்பை மக்களிடம் நடத்தியது.

advertisement

கடந்த வருடம் மே மாதத்திலிருந்து இந்த வருடம் மே மாதம் வரை விமான நிலையங்களுக்கு சென்ற பயணிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கருத்துக் கணிப்பின் முடிவில் லண்டனில் இருக்கும் Luton விமான நிலையம் மோசமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. வெறும் 29 சதவீத மக்கள் மட்டுமே இந்த விமான நிலைய சேவை திருப்தியளிப்பதாக கூறியுள்ளனர்.

இங்குள்ள உணவு கடைகள், கழிப்பறைகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் சேவைகள் திருப்தியளிக்கவில்லை என பயணிகள் கூறியுள்ளனர்.

அதே போல Doncaster நகரில் அமைந்திருக்கும் Sheffield விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக உள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

87 சதவீதம் பேர் இதை கூறியுள்ளனர். ஓய்வெடுக்க மற்றும் அமைதியான சூழலை இந்த விமான நிலையம் கொண்டுள்ளதாக பயணிகள் கூறியுள்ளனர்.

டாப் 5 சிறந்த விமான நிலையங்கள்

Doncaster Sheffield (87%)

London Southend (84%)

Norwich (75%)

Southampton (75%)

Exeter (71%)

டாப் 5 மோசமான விமான நிலையங்கள்

London Luton (29%)

London Stansted (38%)

Manchester Terminal 3 (43%)

advertisement

Aberdeen (44%)

Manchester Terminal 1 (50%)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்