லண்டனில் வெளிநாட்டு தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானிய தலைநகரான லண்டனில் வெளிநாடுகளை சேர்ந்த தாயார்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய தலைநகரான லண்டனில் மக்கள் தொகையின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதே ஆய்வில், லண்டனில் உள்ள மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு 10 குழந்தைகளில் 6 குழந்தைகள் வெளிநாடுகளை சேர்ந்த தாயார்களுக்கு பிறப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த தாயார்கள் புலம்பெயர்ந்தவர்களாக அல்லது மருத்துவத்திற்காக லண்டனுக்கு வந்தவர்களாக இருக்கலாம்.

பிரித்தானிய நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 26 சதவிகித குழந்தைகள் வெளிநாடுகளை சேர்ந்த தாயார்களுக்கு பிறந்துள்ளன.

1990-ம் ஆண்டு புள்ளிவிபரத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

லண்டனில் அதிகளவிலான புலம்பெயர்ந்தர்கள் குடியேறுவதால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, லண்டனில் உள்ள Northwick Park என்ற மருத்துவமனையில் தான் அதிகளவில் வெளிநாடுகளை சேர்ந்த தாயார்களுக்கு குழந்தை பிறந்துள்ளன.

அதாவது, 2016-ம் ஆண்டில் மட்டும் இந்த மருத்துவமனையில் பிறந்த 5,117 குழந்தைகளில் 4,031 குழந்தைகள் வெளிநாடுகளை சேர்ந்த தாயார்களுக்கு பிறந்தவை ஆகும்.

மேலும், Newham University மருத்துவமனையில் 77 சதவிகிதமும் St Mary's, Westminster மருத்துவமனையில் 71 சதவிகித குழந்தைகளும் வெளிநாடுகளை சேர்ந்த தாயார்களுக்கு பிறந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்