இளம் பெண் கற்பழிக்கப்படுவதை வீடியோ எடுத்த தோழி! அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் பெண் ஒருவர், தனது தோழி கற்பழிக்கப்படுவதை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் உள்ள Columbus நகரில் வசித்து வருபவர் Marina Lonina (19). இவர் தனது தோழியுடன் ஷொப்பிங் செல்லும் போது Raymond Gates (29) என்னும் நபர் அவர்களுக்கு நண்பராகியுள்ளார்.

இதனிடையில் ஒரு நாள் Raymond வீட்டுக்கு Marinaவும் அவர் தோழியும் சென்றுள்ளனர். அப்போது மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

போதை அதிகமான நிலையில் Raymond, Marinaவின் தோழியை கற்பழித்துள்ளார். அருகில் இருந்த Marina அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இதை வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை Marina இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதையறிந்த பொலிசார் Marinaவையும், Raymondஐயும் கைது செய்தார்கள்.

பெண்ணை கற்பழித்த Raymondக்கு வெறும் 9 மாதம் சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வீடியோ எடுத்தது, கடத்தல் போன்ற வழக்குகள் Marina மீது போடப்பட்டு அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments