டிரம்புக்கு ஆபாச சைகை காட்டிய பெண்ணுக்கு 55 ஆயிரம் டொலர் நிதியுதவி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரில் சென்று கொண்டிருந்த போது அவரை நோக்கி ஆபாச சைகை காண்பித்த பெண் வேலையை இழந்த காரணத்தால் அவருக்கு இணையதளம் ஒன்று உதவி செய்துள்ளது.

விர்ஜீனியாவில் உள்ள அகிமா எல்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் 50 வயதான பெண் ஜூலி பிரிஸ்க்மேன் ((juli briskman)).

இவர் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவ்வழியாக கோல்ப் கிளப்பிற்கு செல்வதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரிஸ்க்மேன், டிரம்பை நோக்கி ஒரு விரலை நீட்டி ஆபாச சைகை காண்பித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

இதை வெள்ளை மாளிகை புகைப்பட கலைஞர் ஒருவர் படம்பிடிக்க, இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து ஜூலி வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

வேலையிழந்த காரணத்தால் வருவாய்க்கு பாதிக்கப்பட்ட ஜூலிக்கு தற்போது GoFundMe page என்ற இணையதளம் வாயிலாக 55 ஆயிரம் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்