இன்றைய காலகட்டத்தில் பாஸ்போர்ட் எடுப்பது என்பது சுலபமான வழியாக உள்ளது.
இது இருபாலருக்கும் பொருந்தும், ஆனால், 1920 ஆம் ஆண்டுகளில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தால், பெண்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.
ஒரு பெண்ணின் கணவருக்கு பாஸ்போர்ட் வழங்கியிருந்தால், அவரின் மனைவி பாஸ்போர்ட் பெற அனுமதியில்லை.
வேண்டுமென்றால் கணவருடன் சேர்ந்து இணைப்பு பாஸ்போர்ட்டாக வைத்திருக்கலாம்,
தனி பாஸ்போர்ட் வேண்டுமென விரும்பினால் கணவரின் முதல் பெயரில் அப்ளை செய்து வாங்கும் வசதி மட்டுமே அன்று உண்டு.
திருமணமாகாத பெண்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது, அதுமட்டுமின்றி, 1920களில் வர்ஜீனியா மாகாண விதிமுறைப்படி, பெண்களுக்கு என்று ஆடைக்கட்டுப்பாடுகளும் இருந்தன.
நைட் கவுன்களை கழுத்திலிருந்து மூன்று இன்ச் வரை கவர் செய்திருக்கவேண்டும் என்பது விதி. இதைப்போல முழங்கால் வரை கவுன், ஸ்கர்ட்டின் கட்டாய அளவு ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டன.
கலிபோர்னியா, கார்மல் ஆகிய நகரங்களில் ஹைஹீல்ஸ் 2 இன்ச்சுக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்ற விதிமுறையும் இருந்தது.