சீன இதழ் 'தற்செயலாக' ராணுவ ஜெட் விமானத்தில் இருக்கும் ரகசிய ஆயுத விவரங்களை கசியவிட்டுள்ளது.
தகவல்கள் கசிந்ததை அடுத்து, சீன அரசாங்க ஊடகங்கள் அதை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சீன அரசாங்கத்தால் நடத்தப்படும் நவீன கப்பல்கள் இதழ், அதன் முன்பக்கத்தில் கணினியால் உருவாக்கப்பட்ட நாட்டின் புதிய ராணுவ ஜெட் விமானமான H-6N-ன் படத்தை வெளியிட்டது.
குறித்த படத்தில் ஜெட் விமானம் ஒரு பெரிய பாலிஸ்டிக் ஏவுகணையை கொண்டு செல்வதைக் காட்டுகிறது. இந்த ஏவுகணை தற்போது சீனாவின் ராணுவ ராக்கெட் படை பயன்படுத்தும் டாங் ஃபெங் -15 பாலிஸ்டிக் ஏவுகணையில் ஒன்றைப் போலவே தோன்றுகிறது.

எவ்வாறாயினும், அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் இதழ், படங்கள் கணினியால் உருவாக்கியவை, வெறும் கருத்தியல் மற்றும் உத்தியோகபூர்வ பின்னணி இல்லை என விளக்கமளித்தது.
இது உண்மையாக இருந்தால், அனைவரையும் ஈர்க்கக்கூடிய சீனா ராணுவத்தின் கப்பல் எதிர்ப்பு நிலைப்பாடு திறனாக இது இருக்கும் என அவுஸ்திரேலிய ஆய்வாளர் Malcom Davis தெரிவித்துள்ளார்.