டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
1,10,19,28

ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். கணவன் & மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி பணத்தட்டுப்பாடு இருந்ததே! அந்த பற்றாக்குறை குறைந்து பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

நீண்ட நெடுநாட்களாக சகோதரிக்கு தள்ளி போன திருமணம் கூடி வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உங்களுக்கு ஆதரவாகவும் பேசுவார்கள்.

புது வேலைக் கிடைக்கும். பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள்.

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். என்றாலும் இந்த மாதத்தில் கொஞ்சம் வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும்.

சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சி மூத்த தலைவர் உங்களிடம் சில ரகசியங்களை பகிர்ந்துக் கொள்வார்.

கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள்.

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு.

சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். கலைத்துறையினர்களே! வசதி வாய்ப்புகள் பெருகும். தொட்ட காரியங்கள் துலங்கும் மாதமிது

 • அதிஷ்ட தேதிகள்:1,9,10,12,21
 • அதிஷ்ட எண்கள்:2,6
 • அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,கிரே
 • அதிஷ்ட கிழமைகள்:திங்கள்,வெள்ளி
2,11,20,29

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள்.

பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதுசு வாங்குவீர்கள். என்றாலும் சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

வீடு பராமரிப்புச் செலவுகள் இருக்கும். வாகனம் பழுதாகும். தலை வலி, சைனஸ் தொந்தரவுகள் வரக்கூடும். மாத மையப்பகுதியிலிருந்து பிரச்னைகள், சிக்கல்கள், உடல் நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.

சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். இடம், வீடு வாங்குவீர்கள். அவ்வப்போது கோபப்படுவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்ததன்மையையே பின்பற்றுவது நல்லது.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள்.

காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பெரியளவில் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.

கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கரையேறும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்:2,6,15,16,25
 • அதிஷ்ட எண்கள்:1,8
 • அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,மஞ்சள்
 • அதிஷ்ட கிழமைகள்:வியாழன்,சனி
3,12,21,30

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதம் எதிர்ப்புகள் அடங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும்.

வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். சகோதரங்கள் ஆதரிப்பார்கள் என்றாலும் சில நேரங்களில் போட்டி, பொறாமைகள் வரக்கூடும். எங்குச் சென்றாலும் வெற்றி கிடைக்கும். எதிலும் மகிழ்ச்சி உண்டு.

திடீர் பணவரவு உண்டு. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். அம்மாவழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாட்களாக வீடு மாற நினைத்தவர்களுக்கு வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். லோன் கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகும்.

குழந்தை பாக்யம் கிட்டும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் நல்ல விதத்தில் முடியும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ஆன்மிகப் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் பயணங்கள் இருக்கும்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே! பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள்.

புது முதலீடு செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும்.

கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை பிறக்கும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்:3,9,10,21,27
 • அதிஷ்ட எண்கள்:4,5
 • அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ஆலிவ்பச்சை
 • அதிஷ்ட கிழமைகள்:புதன்,சனி
4,13,22,31

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காரியங்கள் சிறப்பாக முடியும். என்றாலும் சில நேரங்களில் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சில முக்கிய விஷயங்களையெல்லாம் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

இடைத்தரகர்களை நம்பி பணத்தை தந்து விட்டு ஏமாற வேண்டாம். மையப்பகுதியிலிருந்து பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள்.

ஷேர் மூலம் பணம் வரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு.

வேலைக் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டுவீர்கள். ஆனால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

உங்களுக்கும் கை, கால் வலிக்கும். மனைவிவழியில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

காதல் கைகூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள்.

உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.

கலைத்துறையினர்களே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். நெடுநாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்:4,1,8,17,26
 • அதிஷ்ட எண்கள்:3,9
 • அதிஷ்ட நிறங்கள்:வெளிர்நீலம்,சிவப்பு
 • அதிஷ்ட கிழமைகள்:ஞாயிறு,வியாழன்
5,14,23

ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஆனால் குடும்பத்தில் கணவன்&மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். ஒருத்தருக்கொருத்தர் போட்டிமனப்பான்மை, தாழ்வுமனப்பான்மை இருக்கும். கொஞ்சம் அனுசரித்துப் போங்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

உறவினர்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். பெரியளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஓரளவு மகிழ்ச்சி, பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்களால் பயடைவீர்கள்.

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.

பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள்.

வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார்கள்.

கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். சகிப்புத் தன்மையால் சாதித்துக் காட்டும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்:5,14,15,23,26
 • அதிஷ்ட எண்கள்:5,7
 • அதிஷ்ட நிறங்கள்:க்ரீம்வெள்ளை,ஊதா
 • அதிஷ்ட கிழமைகள்:திங்கள்,புதன்
6,15,24

ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரங்கள் சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். அழகு, இளமைக் கூடும்.

நல்ல நிறுவனத்தில் உத்யோகம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

பணவரவுக்கு குறைவிருக்காது என்றாலும் பணம் வந்தாலும் செலவுகளும் அடுக்கடுக்காக இருக்கும். அரசு காரியங்கள் உடனே முடியும். உற்சாகமடைவீர்கள். திடீர் திருப்பங்கள் உண்டாகும். சிலர் புது வீடு மாறுவீர்கள்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்துச் சேரும். சகோதரிக்கு திருமணம் முடியும். வசதி, வாய்ப்புகளும் பெருகும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்-. வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்று முடிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிடைக்கும். உயரதிகாரிகளே வியக்கும்படி சில முக்கிய காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.

கலைத்துறையினர்களே! உங்கள் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்:4,5,6,13,14
 • அதிஷ்ட எண்கள்:2,6
 • அதிஷ்ட நிறங்கள்:சில்வர்கிரே,ரோஸ்
 • அதிஷ்ட கிழமைகள்:புதன்,வெள்ளி
7,16,25

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் பணவரவு உண்டு. விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். மூத்த சகோதர வகையில் பிணக்குகள் வரும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும்.

உறவினர், நண்பர்களின் வருகை அதிகரிக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டங்கள் நீங்கும். கொஞ்சம் சேமிக்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். ஆனால் செலவுகள் இருக்கும்-. வாகனம் பழுதாகி சரியாகும். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

கன்னிப்பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மேலதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் பாராட்டை பெறுவீர்கள். நாலும் தெரிந்த நல்லவர்களின் வழிகாட்டுதலால் இலக்கை தொடும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்:6,16,11,15,24
 • அதிஷ்ட எண்கள்:1,4
 • அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தாபச்சை,பிங்க்
 • அதிஷ்ட கிழமைகள்:செவ்வாய்,வியாழன்
8,17,26

ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். கம்பீரமாகப் பேசுவீர்கள். ஆரோக்யம் கூடும். சிக்கல்கள், பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்&மனைவி ஒன்று சேர்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

திருமணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். என்றாலும் வேலைச்சுமை ஒருபக்கம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் உத்யோகத்தில் இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி முன்னேறும் சக்தியும் உண்டாகும்.

தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனவருத்தம் வந்துப் போகும். யாராக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.

வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளால் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள்.

வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் படைப்புகள் பலராலும் பாராட்டப்படும். பழைய பிரச்சனைகள், சிக்கல்கள் தீரும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்:5,8,23,24
 • அதிஷ்ட எண்கள்:2,6
 • அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே
 • அதிஷ்ட கிழமைகள்:புதன்,வெள்ளி
9,18,27

ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்களின் உடல் நிலை சீராகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பிதுர்வழி சொத்து கைக்கு வரும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

அவ்வப்போது வருங்காலத்தைப் பற்றி ஒரு பயம் இருக்கும். யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சில முக்கிய விஷயங்களுக்கெல்லாம் நீங்களே சென்று வருவது நல்லது. அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாக்கி சம்பளத் தொகைக் கைக்கு வரும்.

>சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் மாதமிது.

 • அதிஷ்ட தேதிகள்:1,3,6,9,12
 • அதிஷ்ட எண்கள்:7,9
 • அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம்,பழுப்பு
 • அதிஷ்ட கிழமைகள்:ஞாயிறு,சனி

- Web Dunia

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்