நீங்க இந்த எண்காரர்களா? இந்த மாதம் நீங்க தான் அதிஷ்டசாலிகளாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

எண்ஜோதிடப்படி ஏப்பரல் மாதம் உங்களுக்கு எப்படி என்று பார்ப்போம்

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஒரு பக்கம் சாதகமாகவும், மறு பக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் அனைவரிடமும் ஒரே நிலையை கடைபிடிக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்றவேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. குடும்ப நிம்மதி குறையக்கூடும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். உறவினர்கள் வகையில் வீண் கருத்து மோதல்கள் ஏற்படலாம்.

பெண்களுக்கு செலவு அதிகாரிக்கும். கலைத்துறையினர் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். அரசியலில்உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பணத்தை கையாளும் போது கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 6

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாக்குவன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புதியதாக வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு மனோதிடம் கூடும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும். அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை அன்று நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 2, 5

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிலும் பின்வாங்காத அஞ்சா நெஞ்சம் உடைய நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் சுபச்செலவு ஏற்படும். காரியங்களில் இருந்த தாமதம் நீங்கும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் உடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். எதிர் நோக்கியியிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம்.

நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. எந்த சூழ்நிலையிலும் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது சிறந்தது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு தனவரவு கிட்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மனை வணங்கினால் உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 6

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை உடைய ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுபச் செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமானபணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம்.

குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன பினக்குகள் மறையும். சந்தோஷ சூழ்நிலை நிலவும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வீண்பழி உண்டாகலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3, 9

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தனது அமைதியான நடைமுறையால் வாழ்வில் வெற்றி பெறும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் அதிமுக்கிய காரியங்களை சுபமாக நடத்திக் கொள்வீர்கள்.

மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

வீடு மனை சார்ந்த வழக்குகளில் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள்வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப் பளு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் சேரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்

எண்கள்: 5, 6

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நேர்மையும் அதிக செயல்திறனும் கொண்ட ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் நினைத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் திறன் அதிகரிக்கும். எண்ணியகாரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். தனாதிபதி சுக்கிரனின் உச்ச பலத்தால் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்லவேண்டி இருக்கும்.

சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் உங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். சிற்றின்ப செலவுகள் கூடும். பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களில் முடிவெடுப்பதில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு மனதில் தைரியம் குறையும்.

அரசியல்வாதிகளுக்கு மனகவலை குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விநாயகர் அகவல் படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 2, 5, 6

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வாழ்வில் முன்னேற்றம் பெறும் இந்த மாதம் தடைகள் அனைத்தையும் தகர்ப்பீர்கள். தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.

குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். பெண்களுக்கு பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். அரசியல்வாதிகளுக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.

வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 2, 3, 9

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வேகத்துடன் விவேகமாய் இருக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். சுபச்செலவு ஏற்படலாம்.

பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்