120 நாட்களில் இந்த ராசிக்காரர்களை புரட்டிப்போடப்போகிறார் குரு! எச்சரிக்கையாக இருங்க

Report Print Kavitha in ஜோதிடம்

தனுசு ராசியில் இருந்து கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்ற குரு பகவான் இப்போது வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார்.

வைகாசி மாதம் சூரியனுக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஆவணி மாதம் சிம்மம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தி அடைகிறார்.

14-05-2020 முதல் வக்கிரம் பெற்று 29-06-2020 ஆம் தேதி வக்கிர கதி பெற்று தனுசு ராசிக்கு குரு வந்துவிடுகிறார்.

செப்டம்பர் 13ஆம் தேதி வரை குரு பகவான் வக்ரமாக தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.

அந்தவகையில் 120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கும் குருபகவான் யாருக்கு சாதகமான பலனையும் யாருக்கு பாதகமான பலனையும் தரப்போகிறார் என்று இங்கு பார்ப்போம்.

மேஷம்

குரு பகவான் இந்த வக்ர காலத்தில் உத்திராடம், பூராடம் ராசிகளில் சஞ்சரிப்பார். மேஷம் ராசிக்காரர்களுக்கு புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும்.

அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு சில நேரங்களில் தயக்கமும் தடுமாற்றமும் வரும். பிள்ளைகளின் படிப்பு விசயத்தில் கண்டிப்பாக இருங்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும்.

பங்குச்சந்தை முதலீடுகளில் நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்க. வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும் சிலர் கடையை விரிவுபடுத்துவீர்கள்.

வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெருக்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அலைச்சலை குறைத்து உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பரணி நட்சத்திரகாரர்கள் பொறுமையாக இருங்க நிதானமாக பேசுங்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும் கவனம்.

ரிஷபம்

குரு பகவான் வக்ர காலத்தில் செல்லும் போது உங்களின் மனஇறுக்கங்கள் குறையும் அமைதி உண்டாகும். சிலருக்கு திருமணம் கைகூடி வரும் சிலருக்கு குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

திருமணம் உள்ளிட்ட தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். குறைந்த வட்டிக்கு பணம் வாங்குவீர்கள். வேலையில் இருப்பவர்கள் கவனமாக வேலை செய்யுங்கள்.

இப்போது உள்ள சூழ்நிலையில் பதற்றமும் படபடப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே குருபகவான் வக்ர காலத்தில் கொஞ்சம் முன்னெச்சரிக்கை தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுக்காதீங்கள்.

ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் தடைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களை ஒத்திப்போடுங்கள்.

சிலருக்கு திடீர் பணவரவு வரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். பணவரவு வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களை தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். விரும்பிய கல்லூரிகளில் உயர்கல்வி யோகம் தேடி வரும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென நிறைவடையும், அரசு வழி காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். வீடு கட்ட வாஸ்து செய்வீர்கள், அரசு அப்ரூவல் கிடைக்கும்.

சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகள் இன்றி நிறைவேறும். உங்களின் பேச்சுக்கும் செயலுக்கும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

குரு தனுசு ராசியில் வக்ரகதியில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. பேச்சில் கவனமாக இருங்க. அவசரப்பட்டு பேசிவிட்டு அப்புறம் அவதிப்படாதீங்க. சிலருக்கு வீண் அலைச்சல்கள் வரலாம் கவனமாக இருங்க.

சிம்மம்

குரு பகவான் வக்ரமடைவதால் உங்களுக்கு பணவருமானம் வரும் பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு கட்ட முயற்சி செய்வீர்கள்.

வீடு கட்டும் ப்ளான் அப்ரூவல் வாங்குவீர்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சொந்தபந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். விஐபிக்களுடன் நட்பு ஏற்படும். தடைபட்டு தள்ளிப்போன சுப காரியங்களை நடத்துவீர்கள்.

உங்களின் அழகு ஆரோக்கியம் கூடும். கொரோனா வைரஸ் லாக்டவுனால் வேலை இல்லையே வருமானம் இல்லையே செலவுக்கு என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம் இந்த 120 நாட்களில் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் வரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் குடும்பம் அமைதியான சூழ்நிலைக்கு மாறும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

புனித தலங்களுக்கு சுற்றுலா செய்யவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். வீட்டிற்குள் 60 நாட்களுக்கு மேல் அடைபட்டிருந்த நீங்கள் பயணங்களினால் உற்சாகமடைவீர்கள்.

எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசாதீர்கள் வளைந்து கொடுத்து போங்க. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நிதானமும் பொறுமையும் தேவை. தாய்வழி உறவினர்களால் செலவுகளால் வரும். அரசு வழி விவகாரங்களில் பிரச்சினை வரலாம் அலட்சியமாக இருக்காதீர்கள்

குரு பகவான் பூராடம் நட்சத்தில் வக்கிரமாக செல்லும் கால கட்டமான ஜூலை 31 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்களுக்கு அற்புதமான காலகட்டம்.

உங்களுக்கு வருமானம் வரும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் புகழ்பெற்ற சுற்றுலாதலங்களுக்கு செல்வீர்கள். உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வண்டி வாகனத்தை பராமரிப்பு செய்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வீண் பிரச்சினைகள் வரலாம் வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். இளைய சகோதரர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் சுறுசுறுப்பாக உற்சாகமாக வேலையை செய்து முடிப்பீர்கள்.

அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஜூலை மாதத்திற்கு மேல் உங்களின் சமயோஜித புத்தி அதிகமாகும்.

புதிய வேலை கிடைக்கும், மனைவி மூலம் ஆதரவு அதிகரிக்கும். மனைவி வழி சொத்துக்கள் கிடைக்கும்.

சிலருக்கு புதிய வண்டி வாகனம் அமையும். இந்த 120 நாட்களும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிங்க மக்களே.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். வீடு கட்ட தொடங்குவீர்கள் வங்கிக்கடனுதவி கிடைக்கும்.

மனதெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பூ பூக்கும். உங்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும்.

புதிய பதவிகள் தேடி வரும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். அதே நேரத்தில் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்கள் ஜென்ம ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிரமாக செல்லும் காலத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும்.

வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். புதிய பதவிகள் தேடி வரும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வேலையை ஒத்துக்கொள்ளவும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்ளுக்கு வேலைச்சுமை அதிகமாகும். எண்ணெய் பலகாரங்களையே, காரமான உணவுகளையோ வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்க. கடன் பிரச்சினைகள் உங்களுக்கு தொல்லையை கொடுக்கலாம். எடுத்த காரியத்தை முடிக்க போராட வேண்டியிருக்கும். வேலையில் கவனமாக இருங்க.

கர்ப்பிணி பெண்கள் இந்த கால கட்டத்தில் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சாப்பிடாதீங்க. பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். தேர்வுக்கு தயாராகும் பிள்ளைகளை பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு கொரோனா லாக் டவுனால் எல்லாமே முடங்கி போயிருந்தது. திடீர் பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும்.

உறவினர்கள் மூலம் மறைமுக நெருக்கடிகள் வரும். பண நெருக்கடி வரும். வட்டிக்கு கடன் வாங்கியிருந்தவர்களுக்கு நெருக்கடிகள் வரலாம்.

எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். வீண் செலவுகளை தவிர்த்து விடுங்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த கால கட்டத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. கைமாற்றாக வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுப்பீர்கள். தொலைந்து போன பணம், நகை ஆவணங்கள் திரும்ப கிடைக்கும்.

உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும்.

கொரோனா லாக் டவுனால் டூர் போகமுடியலையே என்று கவலைப்பட்டு வந்த உங்களுக்கு ஜூலை மாதத்தில் நல்ல ரிலீப் கிடைக்கும் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.

பயணங்களினால் புத்துணர்ச்சி அதிகமாகும். கஷ்டமான காரியங்களை லேசாக செய்து முடிப்பீர்கள். திருமணம் சுப காரியங்கள் கைகூடி வரும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்