கொத்து கொத்தா முடி கொட்டுதா? இதனை தடுக்க இதோ சில டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
334Shares

ஒவ்வொருவருக்கும் தலைமுடி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தலை முடி தான் ஒருவரது அழகை நிர்ணயிக்கிறது.

அத்தகைய தலை முடியை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நாம் தலைமுடியை என்னதான் ஒழுங்காக பராமரித்தாலும் கொத்து கொத்தாக முடி கொட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

தலைமுடியை பராமரிக்க பலவகையான வழிமுறைகள் இருந்தாலும், இயற்கை முறையை கையாளுவதே மிக சிறந்த முறையாகும்.

அந்தவகையில் தற்போது முடி கொட்டுவதை தடுக்க சில வழிகளை தற்போது இங்கு பார்ப்போம்.

  • சிறிது வெந்தயத்தை நுரில் ஊற வைத்து அரைத்து, அதில் சிறிது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியின் தடலி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

  • வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை முடியின் வேர்ப்பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 3 முறை செய்தால், முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி தூண்டப்படும்.

  • சிறிது கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும்படி தடவி மசாஜ் செய்து, ஒரு ஈரத்துணியால் தலையைச் சுற்றி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

  • கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் படுமாறு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, முடி மென்மையாகவும், பட்டுப்போன்றும் இருக்கும்.

  • முட்டையின் வெள்ளைக்கருவை பிரித்தெடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதை தலைமுடியில் தடவ வேண்டும். பின் ஒரு மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்புவால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது நின்று, நன்கு வலுவாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்