ஶ்ரீலங்கா ஜேர்மனி நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் முதலீடு தொடர்பான மீள்செயற்பாட்டு ஒன்றுகூடல்

Report Print Gokulan Gokulan in வர்த்தகம்
197Shares

ஜேர்மனியில் Frankfurt நகரில் அமைந்துள்ள ஶ்ரீலங்காவிற்கான வெளிநாட்டுத்தூதரகத்தினால் புதிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்க வருகை தந்த Manori Unambuwe அவர்களின் வரவேற்புடன் ஜேர்மனியின் உடனான வர்த்தக உடன்படிக்கை ஒன்றுகூடல் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

31.07.2020 அன்று நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஜேர்மனியில் இருந்து தலைசிறந்த தொழில் நிபுணர்கள், தரம் நிறைந்த முதலீட்டாளர்கள் , வர்த்தக பொருளாதார சங்கத்தினரென 35 பேருக்கு மேற்பட்டோர் வருகைதந்து நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.

தூதரக உயர்அதிகாரி Madurika Joseph Weninger அவர்கள் வருகைதந்த அனைவரையும் வரவேற்று இலங்கை ஜேர்மனி இடையிலான பரஸ்பர நல்லுறவு குறித்துத் தெளிவுபடுத்தி உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் 2019 ஆண்டானது ஜேர்மனியுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலமாக 1. Billion Euro.விற்கு மேற்பட்ட தொகையை வருமானமாக ஈட்டித்தந்து இருநாடுகளையும் சிறந்த உற்பத்தி மையங்களாக ஆக்கியதெனவும் குறிப்பிட்டிருந்தார்.

உயர்ஸ்தானிகர் Manori Unambuwe அவர்கள் தனது ஆரம்ப உரையில் ஜேர்மனியானது இலங்கையுடன் மிகச்சிறந்த வர்த்தகப்பங்குதாரராகவும் சிறந்த நட்புறவு நாடாகவும் இருப்பதாகவும் இவ்வளர்ச்சி தொடர்ந்து தரமாக உயர்வடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது உரையில் நாம் முதலீட்டாளருக்கான பாதுகாப்புத்துறை மென்பொருள் அபிவிருத்தி இணையத்தொடர்புகளில் WIPO ( World Intelletual Property Organization )உடன் ஒப்பந்தகாரராக இணைந்து இலங்கை தலை சிறந்தநாடாகச் செயற்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைத்தூதரக அதிகாரியாகிய Ahmed Razee அவர்கள் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை ஜேர்மன் உடனான பாரிய பங்களிப்பையும் புவியியல் மையங்களையும் வேலைவாய்ப்புக்களையும் பற்றிக்குறிப்பிட்டதுடன் திறமைமிகு இலங்கைத்தொழில் வல்லுனர்களையும் கவர்ச்சிகரமான ஈடுபாட்டையும் ஆசியப்பிராந்தியப்பரந்த சந்தைவாய்ப்புகள் பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் SMIS வர்த்தக உடன்படிக்கைகுறித்தும் GSP Plus மூலமாக இலங்கைக்கு நிறைய நன்மைகள் கிடைப்பதாகவும் ஜேர்மனிக்கான ஏற்றுமதி சந்தைவாய்ப்பு அதிகரிப்பதாகவும் முதலீடு வர்த்தகம் தொடர்பான செயற்திட்டங்கள் ஊக்கமளிப்பதாகவும் தொற்றுநோய் பரவும் காலத்திலும் கூட தகவல் தொழில்நுட்பம் உடல்நலம் போன்றவிடயங்களில் ஜேர்மனியுடனான ஒன்றிணைந்த செயற்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் ஒன்றிணைந்து செயற்பட்டு பல தொழில் நிறுவனங்களை இலங்கையில் ஏற்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் பிராங்பேர்ட் நகர பாராளுமன்ற தலைவர் ஸ்டெபன் சீஃளர் ,கஸ்தூரி ததே பிராங்பேர்ட் ரெய்ன் மெயின் இயக்குனர் , முகாமைத்துவ இயக்குனர் பிரான்ஸ் ஜோசப்வூல்ப் , மனோரி உனம்புவே ஜேர்மன் இலங்கை தூதரகத்திற்காக பதவியேற்கும் உயர்ஸ்தானிகர் , முகாமைத்துவ இயக்குனர் பெர்னாட்வூல்ப் , மதுரிகா ஜோசெப்வெனிங்கர் ஜேர்மனிக்கான ஶ்ரீலங்காத்தூதரக உயர் ஆணயாளர், ஹெஸ்ஸென் வர்த்தக துணை ஆணையாளர் மைக்கல் போர்ச்மென்.

மேலும் அகமத்ரசீ (தூதரகஆணையாளர் , இலங்கைத்தூதரகம் ஜேர்மனி), Dr, சோமகாந்தன் சோமலிங்கம் ( ஜேர்மனி - ஶ்ரீலங்கா வர்த்தக சபை உறுப்பினர் ), தம்மிகந்தகே ( தலைவர்ஜேர்மனி- ஶ்ரீலங்கா வர்த்தகசபை), நிகால்சமரசிங்கா (றைன்லானட் மாநிலத்திற்கான கௌரவ உயர் இலங்கைத்தூதர்), மாகெரட்ரிஷ்ரவ் ( பொருளாளர் இலங்கை-ஜேர்மன்வர்த்தகசபை ) , முருகையா கோபினாத் ( துணைத்தலைவர்- இலங்கை- ஜேர்மன் வர்த்தக சபை) போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்