கணவன், மனைவியை கொல்ல திட்டமிட்ட கள்ளக் காதலர்கள்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in கனடா

கனடா நாட்டில் கணவன், மனைவியை கொலை செய்ய ரகசியமாக திட்டம் தீட்டிய கள்ளக் காதலர்கள் இருவருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கனடாவில் உள்ள Saskatchewan நகரில் Curtis Vey(52) மற்றும் Angela Nicholson(51) என்ற இரண்டு கள்ளக் காதலர்கள் வசித்து வருகின்றனர்.

நீண்ட வருட பழக்கமுடைய இருவரும் தங்களுடைய கணவன் மற்றும் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட மனைவி அவரது கைப்பேசி உரையாடலை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மனைவியை கொல்வது தொடர்பாக காதலன் தனது காதலியிடம் கைப்பேசியில் பேசியுள்ளார்.

மறுமுனையில் உள்ள காதலி தனது கணவனை கொலை செய்வது தொடர்பாக பேசியுள்ளார்.

இறுதியாக இருவருக்கும் போதை மருந்து கொடுத்து கொலை செய்ய வேண்டும் என இருவரும் தீர்மானிக்கின்றனர்.

ஆனால், இருவரின் உரையாடல்களை கேட்ட மனைவி அதிர்ச்சி அடைந்து பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மனைவியின் புகாரை பெற்ற பொலிசார் கள்ளக் காதலர்கள் இருவரையும் கைது செய்தனர்.

கடந்த யூன் மாதம் நடந்த விசாரணையில் இருவரும் குற்றவாளிகள் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, ‘தங்களது கணவன் மற்றும் மனைவியை கொல்ல திட்டமிட்ட குற்றத்திற்காக இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக’ நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இருவரும் வாழ்நாள் முழுக்க துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments