கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் ஆட்களை கடத்திய பெண் கைது

Report Print Balamanuvelan in கனடா

அமெரிக்காவின் North Carolina பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆறு மெக்சிகோ நாட்டவர்களை அமெரிக்க நாட்டிற்குள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க எல்லையில் ரோந்து செல்லும் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்காவிற்குள் ஆறு பேர் கனடா எல்லைக்கருகே Vermont சாலை ஒன்றின் அருகே நடந்து செல்வதாக தகவல் கிடைத்தது.

பொலிசார் அங்கு சென்ற போது Carmen Melari Ferrufino Perdomo (31) என்றபெண் ஓட்டி வந்த காரைக் கண்டு நிறுத்தினர்.

அந்தக் காரில் 21 வயது முதல் 54 வயது வரையிலான 6 மெக்சிகோ நாட்டவர்கள் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.

அவர்கள் யாரிடமும்குற்றவாளிகளுக்கான ஆவணங்களோ அல்லது புலம்பெயர்தலுக்கான ஆணங்களோ இல்லை.

அந்தப் பெண் கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் அந்த மெக்சிகோ நாட்டவர்களை கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்தப் பெண்ணும் அந்த மெக்சிகோ நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்