எட்டு வயது சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகம் செய்த கொடூரன்: கூறிய அதிர்ச்சி வார்த்தைகள்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் எட்டு வயது சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்த ஒருவன் பிடிபட்டபோது கூறிய வார்த்தைகள் கேட்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

அந்த சிறுமியுடன் இருந்த உறவினர் தண்ணீர் எடுத்து வருவதற்காக நகர்ந்த இடைவெளியில் Charles (20) என்னும் அந்த கொடியவன் சிறுமியை தூக்கிக் கொண்டு அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டான்.

காட்டுப் பகுதியிலுள்ள பங்களா ஒன்றிற்கு அவளைத் தூக்கிச் சென்ற அந்த மிருகம் மூன்று மணி நேரம் அந்த சிறுமியைச் சீரழித்தது. பின்னர் அவன் அந்த சிறுமியை போக விட்டு விட்டான்.

ஏழு கிலோமீற்றர்கள் நடந்த அந்த குழந்தை, ஒரு வீட்டைக் கண்டதும் அங்குள்ளவர்களிடம் தனக்கு நேரிட்ட கொடுமையைக் குறித்துக் கூற, அதிர்ச்சியுற்ற அந்த வீட்டினர் பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

இரண்டு நாட்களுக்குமுன் Charles பொலிசில் பிடிபட்டான்.விசாரிக்கும்போது, குட்டியாகவும் பெலவீனமாகவும் இருந்ததால் அவளைத் தூக்கிச் சென்றதாகக் கூறிய அவன் உதிர்த்த சில வார்த்தைகள் கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

நான் செய்ததைக் குறித்து எனக்கு வருத்தமில்லை, நான் பிடி படுவேன் என்று தெரிந்தேதான் அவளைத் தூக்கிச் சென்றேன் என்று கூறியுள்ளான் அவன். அரசு வக்கீல் அவனுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்