தப்பு பண்ணிட்டேன் சார்! கனடாவில் சென்று பணி செய்ய நினைத்த தமிழருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in கனடா
883Shares
883Shares
ibctamil.com

வெளிநாட்டு வேலைக்காக பணத்தைக் கொடுத்து ஏமாந்த பட்டதாரி, தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட நிலையில் பொலிசார் அவர் பணத்தை மீட்டு கொடுத்துள்ளனர்.

தமிழகத்தின் வாலாஜாபாத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி கனகவள்ளி. இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ள நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் இறந்துவிட்டார்.

பின்னர் கனகவள்ளி கஷ்டப்பட்டு பால்வியாபாரம் செய்து வெங்கடேசனை எம்.பி.ஏ வரை படிக்க வைத்த நிலையில் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

இந்நிலையில், வெளிநாட்டில் சென்று சம்பாதிக்கலாம் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற வெங்கடேசன் தனது அம்மா, சகோதரிகள் நகைகளை விற்று ரூ. 3 லட்சத்தை அங்கு கொடுத்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனமும் கனடாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததோடு, அதற்கான ஆஃபர் கடிதத்தையும் கொடுத்தனர்.

ஆனால், வெங்கடேசனை சம்பந்தப்பட்ட நிறுவனம் கனடாவுக்கு அனுப்பவில்லை. அதனால் அவர் பணத்தை திரும்ப கேட்டு நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை.

அதனால் மனமுடைந்த வெங்கடேசன், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில், சென்னை பொலிஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சில நாளுக்கு முன், வெங்கடேசன் சந்தித்தார்.

தன்னுடைய முழு விவரங்களைக் கண்ணீர்மல்க தெரிவித்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டதை அடுத்து வெங்கடேசன் ஏமாந்த நிறுவனத்தின் தலைவர் ஆறுகிருஷ்ணனைப் பிடித்து விசாரித்தனர்.

பின்னர் அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் வாங்கப்பட்டு வெங்கடேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

பணத்தை வாங்கிய வெங்கடேசன் கூறுகையில்,குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நான் பணத்தை இழந்த வேதனையில் தற்கொலை செய்துகொள்ள விஷம் குடித்தேன். தப்பு பண்ணிட்டேன் சார். காவல்துறை அதிகாரிகளாகிய நீங்கள் தான் எங்கள் குல சாமி என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அதைக்கேட்ட பொலிசார், எங்களின் கடமையைத்தான் செய்தோம். இனிமேல் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்