கனடாவில் மலை மீது ஆசையாக ஏறிய நபருக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பனிகள் படர்ந்த மலையின் மீது ஏறிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்பெர்டா மாகாணத்தின் Banff நகரை சேர்ந்த 20களில் உள்ள இளைஞர் அங்குள்ள Cascade மலை மீது ஏறியுள்ளார்.

இந்நிலையில் மலையில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இறந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

ஆனால் தற்போது வரை அவரின் பெயர் மற்றும் இன்னபிற விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

குளிர்காலத்தில் Cascade மலை மீது ஏற அதிக மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்