தரையிறங்கும் நேரத்தில் விமானத்தில் அலறிய இளம்பெண்: உள்ளிருந்த கொடிய விஷத்தேள்

Report Print Vijay Amburore in கனடா

கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் விமானத்தில் பயணிக்கும்போது, அவரது இருக்கையில் விஷம் கொண்ட தேள் இருப்தை பார்த்து உதவி கேட்டு அலறியுள்ளார்.

கனடாவின் யூகன் பகுதியை சேர்ந்த கின் மால்டாஸ் என்கிற இளம்பெண், ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள தன்னுடைய கல்லூரிக்கு செல்வதற்காக டொரோண்டோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பியுள்ளார்.

விமான பயணத்தின் போது, குளிர்சாதன வசதி இருந்தும் கூட அவருடைய உடலில் வியர்வை அதிகரித்து காணப்பட்டுள்ளது. காரணம் என்னவென்று தெரியாமலே 30 நிமிடங்கள் பயணித்துள்ளார்.

பின்னர் விமானம் தரையிறங்கும் சமயத்தில் அவருக்கு திடீரென பின் பக்க வலி அதிகரித்துள்ளது. ஆடைகளை மட்டுமே சோதனை செய்துவிட்டு எதுவும் இல்லாததால் அமைதியாக இருந்துள்ளார். விமானம் தரையிறங்கும் நேரம் என்பதால் சீட்பெல்ட்டை கழட்டாமல் பின் பக்கத்தையும் கவனித்துள்ளார்.

அப்போது ஏதோ இன்று அசைவதை போல அவருக்கு தெரிந்துள்ளது. உடனடியாக அலற ஆரம்பித்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த விமான பணிப்பெண், சீட்டை பார்த்துவிட்டு எதுவும் இல்லையென கூறியுள்ளார். மறுபடியும் சரியாக பாருங்கள் என கின் மால்டாஸ் கூறியதால், மீண்டும் சோதனை செய்தனர்.

அப்போது 4 அங்குல நீளத்திற்கு ஒரு விஷத்தேள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துளளனர். இதனையடுத்து உடனடியாக மால்டாஸ்க்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம் அந்த தேளும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்த சம்பவத்தில் மால்டாஸ்க்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என மருத்துவர்கள் கூறினார்கள். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிர்வாகம், தேள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து மால்டாஸ் பேசுகையில், தேள் இருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக தான் இருந்தது. அதற்காக பயணத்தை என்னால் நிறுத்த முடியாது. இனிமேல் விமானத்தில் அமரும்போது இருக்கையை சோதனை செய்வேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்