கனடாவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்.. விற்பனைக்கு வரும் கஞ்சா கலந்த உணவு

Report Print Basu in கனடா

கனடாவில் உண்ணத்தக்க கஞ்சா பொருட்களை விற்பனை செய்ய அந்நாட்டு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2018 ஆம் அண்டு அக்டோபர் மாதம் பொதுபோக்கு கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டதை தொடர்ந்து புதிய விதிமுறை நடைமுறைபடுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உண்ணத்தக்க கஞ்சா பொருட்கள் விற்பனைக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.

எனினும், கஞ்சா பொருட்களால் இளைஞர்கள் ஈர்க்கப்படாமல் இருக்க கடுமையான விதிகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. அதே சமயம், குழந்தைகள் உணவு பொருட்களான சாக்லேட் அல்லது லாலிபாப்ஸ் போன்றவற்றில் கஞ்சா இருக்காது எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

திருத்தப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம், கஞ்சாவுடன் தொடர்புடைய பொது சுகாதார மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் குறைப்பதற்கான அடுத்த படியாகவும், கனடாவில் இந்த தயாரிப்புகளுக்கான சட்டவிரோத சந்தையை அகற்றவதற்கான அடுத்த படியாகும் என எல்லை பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குறைப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறையின் படி, உணவுகள் அல்லது பானங்களில் 10 மில்லிகிராமிற்கு அதிகமாக கஞ்சா பயன்படுத்தக்க கூடாது. கனடாவில், கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டதை தொடர்ந்து 5.4 மில்லியன் கனடியர்கள் கஞ்சாவை வாங்கியுள்ளனர். அதில, 600,000 பேர் முதன் முறையாக கஞ்சாவை பயன்படுத்தியுள்ளனர் என மத்திய புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்