கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞர்! அவரை பார்த்ததாக கூறிய இளம்பெண்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் தமிழ் இளைஞர் காணாமல் போன நிலையில் அவரை தான் பார்த்ததாக இளம்பெண்ணொருவர் கூறியுள்ளார்.

கனடாவின் ரொரன்ரோ பொலிசார் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், திருசந்த் யோகராஜா என்ற 22 வயது இளைஞர் கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போனதாக தெரிவித்தனர்.

அவர் கடைசியாக Middlefield Rd + Finch Av பகுதியில் 7ஆம் திகதி காலை 10.30 மணிக்கு காணப்பட்டதாக பொலிசார் கூறியிருந்தனர்.

இந்த பதிவை பார்த்த ஜாயித் ரோஸ் என்ற இளம்பெண், நான் இந்த இளைஞரை Main stationல் பார்த்ததாக நம்புகிறேன்.

கிழக்கு நோக்கிச் செல்லும் ரயிலில் இருந்து வந்த அவர் மேற்குப் பாதையில் செல்லும் ரயிலுக்கு அருகே உள்ள மாடிப்படிகளில் இறங்கினார்.

அவர் முகத்தை நான் பார்க்கவிலை என்றாலும் நீங்கள் கூறிய அதே உடையில் அவர் இருந்ததோடு, ஆட்டிசம் தொடர்பிலான நகர்வுகள் அவரிடம் தெரிந்தது என கூறினார்.

இதற்கு பதிலளித்த பொலிசார் உடனடியாக எங்கள் உதவி எண்ணுக்கு போன் செய்து இந்த தகவலை சொல்லுங்கள் என அப்பெண்ணிடம் கேட்டு கொண்டனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்