கனடாவில் சிலருக்கு கொரோனா வைரஸின் அறிகுறி

Report Print Tamilini in கனடா

கொரோனா வைரஸின் அறிகுறிகளுக்காக கனடாவில் சிலர் கண்காணிக்கப்படுவதாக கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இவர்கள் சீனாவில் இருந்து கொரோனா வைரஸைப் பெற்றிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக கூறிய அமைச்சர் இதனால் கனடியர்களுக்கான ஆபத்து குறைவாகவே உள்ளதாகவும் கூறினார்.

கனடாவில் ஐந்து அல்லது ஆறு பேர் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்த அவர் இதில் குறைந்தபட்சம் வான்கூவரில் ஒருவர் மற்றும் மற்றொருவர் கியூபெக்கில் உள்ளதாக உறுதிப்படுத்தினார்.

இந்த நோயைக் கண்டறிந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க மத்திய அரசு சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமது மாகாணத்தில் ஐந்து பேர் கண்காணிப்பில் உள்ளதாக கியூபெக்கின் பொது சுகாதார அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இவர்கள் ஐவரும் அணமையில் சீனாவுக்குப் பயணம் செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்