வீட்டு வேலைக்காரர்களைப்போல் வேலை வாங்குகிறார்கள்: ஹரி மேகன் மீது ஸ்காட்லாண்ட் யார்டு புகார்!

Report Print Balamanuvelan in கனடா

உலகின் தலைசிறந்த பாதுகாவலர்கள் என கருதப்படும் ஸ்காட்லாண்ட் யார்டு பொலிசார், தங்களை இளவரசர் ஹரியும் மேகனும் வீட்டு வேலைக்காரர்களைப்போல மோசமாக நடத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

ராஜ குடும்ப பொறுப்புகளைத் துறந்து கனடாவில் வாழும் பிரித்தானிய இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் மற்றும் அவர்களது குழந்தை ஆர்ச்சியின் பாதுகாவலுக்காக, ஸ்காட்லாண்ட் யார்டின் சிறப்பு பயிற்சி பெற்ற பொலிசார் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்கள் காய்கறி, மளிகை சாமான் வாங்கி வருவதற்காகவும், காபி வாங்கி வருவதற்காகவும் அனுப்பப்படுவதாக பாதுகாவலர்களில் ஒருவரே வேதனை தெரிவித்துள்ளார்.

15 பாதுகாவலர்கள் அடங்கிய பொலிசார் குழு ஒன்று கனடாவில் ஹரி மேகன் குடும்பத்தின் பாதுகாப்புக்காக பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் அவர்களது பாதுகாப்புக்காக, ஆண்டொன்றிற்கு கனடா மற்றும் பிரித்தானியர்களின் வரிப்பணம் 3 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 6 மில்லியன் பவுண்டுகள் வரை ஆண்டொன்றிற்கு செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில், கையில் காபி கோப்பை ஒன்றுடன் பொலிசார் ஒருவர் நிற்பதைக் காண முடிகிறது.

இப்படி பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளவர்கள் மளிகைக் கடைக்கும் காபி ஷாப்பிற்கும் சென்றிருக்கும் நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் அபாயம் இருப்பதால், அப்படி செய்வது ஆபத்தானது என்கிறார்கள் பாதுகாவலர்கள்.

ராஜ குடும்பத்திற்குள் மேகன் காலடி எடுத்து வைத்த நேரத்தில், அவர் எங்கிருந்தாலும் சர்ச்சை இருக்கும், இப்போது ஹரியுடன் கனடாவுக்கு சென்றபின்னும் அது தொடர்வது வேதனைக்குரிய விடயம்தான்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்