நடுவானில் கோளாறான கனடா விமானம்... வட்டமிட்ட போர் விமானம்: திறமையாக செயல்பட்ட விமானியின் வீடியோ

Report Print Basu in கனடா
272Shares

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து புறப்பட்ட ஏர் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் இன்ஜின் நடுவானில் கோராறானதால் பயணிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.

டொரொன்டோ செல்லும் ஏர் கனடா போயிங் 767 விமானம், 128 பயணிகளுடன் அதிகாலையில் ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து புறப்பட்டுள்ளது.

ஆனால், புறப்பட்டபோது ஒரு டயர் வெடித்ததாலும், அதன் இரண்டு இன்ஜின்களில் ஒன்று சேதமடைந்ததாலும் உடனேயே அவசர அவசரமாக திரும்ப வேண்டியிருந்தது.

எனினும், விமானத்தில் அதிகளவிலான எரிபொருள் இருந்ததால், அதன் அளவை குறைக்க மாட்ரிட் வான்வெளியில் விமானம் 4 மணி நேரம் பறந்துள்ளது.

இதன்போது, ஏர் கனடா விமானத்தின் தரையிறங்கும் கியருக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு எஃப் 18 போர் விமானத்தை அனுப்பியது.

பின்னர், அடோல்போ சுரேஸ்-பராஜாஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரகால வாகனங்கள், தீயணைப்பு லொறிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளன.

இதனையடுத்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், இன்ஜின் செயலிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.

நாங்கள் நடுவானில் இருந்தபோது அனைவரும் மிகுந்த பதற்றத்தில் இருந்தோம். ஆனால், விமானிகள் கடுமையாக பாடுப்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர் என தனது பெற்றோருடன் விமானத்தில் இருந்த வான்கூவரைச் சேர்ந்த ப்ரோக் மியர்ஜெவ்ஸ்கி கூறினார்.

ஏர் கனடா நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விமானம் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜினில் சிக்கலை சந்தித்தது, அதே போல் டயர் ஒன்றும் சேதடைந்தது.

இந்த விமானம் ஒரு இன்ஜின் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் எங்கள் விமானிகள் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு முழுமையாக பயிற்சி பெற்றவர்கள்.

ஆயினும்கூட, தரையிறங்கும் முன்னுரிமையைப் பெறுவதற்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டது என்று ஏர் கனடா தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்