கனடாவில் அதிகாலையில் ஜாகிங் சென்ற பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய இளைஞன்! பொலிசார் முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காலை 5 மணிக்கு ஜாகிங் சென்ற இளம்பெண் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

Calgary-ல் தான் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி 5 மணியளவில் இளம்பெண்ணொருவர் ஜாகிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகில் வந்த இளைஞன் திடீரென கத்தியுள்ளான்.

பின்னர் பெண்ணின் உடலில் தவறாக தொட்ட இளைஞன் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளான்

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கத்திய நிலையில் அங்கிருந்து அவன் தப்பியுள்ளான்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், குற்றவாளியின் வயது 20ல் இருந்து 30க்குள் இருக்கும்,சிவப்பு நிற சட்டையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அவன் அணிந்திருந்தான்.

அவன் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கலாம்.

தனிமையான இடத்தில் ஜாகிங் செல்பவர்கள், அவர்கள் செல்லும் இடம் குறித்தும் எப்போது திரும்புவேன் என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் தர வேண்டும்.

இதோடு தங்களின் போனில் உள்ள ஜிபிஎஸ்-ஐயும் அவர்கள் பகிரலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்