கமல் என்ன செய்தாலும் சரியா செய்வார்..ரஜினி அரசியலில் ஈடுபட்டால்? சவுந்தர்யா ரஜினிகாந்த்

Report Print Santhan in சினிமா

கமல்ஹாசன் என்ன செய்தாலும் சரியா செய்வார் என்றும் ரஜினி அரசியலில் ஈடுபட்டால் ஆதரிப்போம் என்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இது குறித்து கூறுகையில், அப்பா அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தினர் அனைவரும் ஆதரிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கமல் தங்களது குடும்ப நண்பர் என்றும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கமல் என்ன செய்தாலும் சரியாகத் தான் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments