சாம்சங் நிறுவனத்தில் அதிரடி சோதனை! சிக்கியது என்ன?

Report Print Raju Raju in நிறுவனம்

தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே பல ஊழல் குற்றசாட்டுகளில் மாட்டியிருக்கும் நிலையில், அவர் தோழியுடன் நட்பு பாராட்டும் சாம்சங் நிறுவனத்தில் அரசு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தியுள்ளார்கள்.

தென் கொரியாவின் அதிபர் பார்கின் நெருங்கிய தோழி சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையிட்டு பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக வந்த புகார்களை அடுத்து கடந்த 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

சோய் சூன் சில் அதிகாரத்தை பயன்படுத்தும் போது பெரிய நிறுவனங்களுடன் தொடர்ப்பு வைத்தாககவும், அதில் ஒன்று சாம்சங் நிறுவனம் என கூறப்பட்டதை தொடர்ந்து அதன் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

சோதனையில் பல முக்கிய ஆவணங்களும், பொருட்களும் அரசு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையில், சாம்சங் நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது உண்மை தான். ஆனால் அதற்கு மேல் வேறு எதையும் கூற முடியாது என சாம்சங் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments