காப்பி அடித்த சாம்சங்: ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு கேட்கும் ஆப்பிள்

Report Print Kavitha in நிறுவனம்
135Shares
135Shares
ibctamil.com

சாம்சங் நிறுவனத்திடம் சுமார் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.

தனது 5 காப்புரிமைகளை காப்பி அடித்து சாம்சங் பலன் பெற்றதாகவும் இதனால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்ய அந்நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க வேண்டும் என்றும் ஆப்பிள் வலியுறுத்தியுள்ளது.

7 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட இவ்வழக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

மொத்த ஃபோனுக்கும் இழப்பீடு நிர்ணயிப்பதா அல்லது காப்பி அடித்த பாகத்துக்கு மட்டும் இழப்பீடு நிர்ணயிப்பதா என நீதிபதி முடிவெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்