அமேஷானின் புதிய முயற்சி: இனி இந்த வசதிகளையும் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் முன்னணி மின் வணிக நிறுவனங்களுள் ஒன்றாக அமேஷான் விளங்கி வருகின்றது.

இந்நிறுவனமானது இந்தியாவிற்கென தனியான தளத்தினைக் கொண்ட சேவையையும் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் விரைவில் இந்திய பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது பேரூந்து மற்றும் புகையிரத முன்பதிவுகளை அமேஷானில் மேற்கொள்ள முடியும்.

இதற்காக Amazon Pay வசதியினையும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் விமான முன்பதிவுகளை மேற்கொள்வதற்காக Cleartrip மற்றும் சினிமா முன்பதிவுகளுக்காக BookMyShow என்பனவற்றினை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்