கும்பளே நடத்திய போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி!

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
கும்பளே நடத்திய போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பளே கொடுத்த 1 மணி நேர டெஸ்ட் போட்டியில் அணித்தலைவர் கோஹ்லி உட்பட சில துடுப்பாட்ட வீரர்கள் தோல்வியடைந்தனர்.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு, அந் நாட்டுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது,

இதற்கு இந்திய வீரர்களை தயார் படுத்தும் வகையில் இந்திய வீரர்கள் பெங்களுரில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களுரில் உள்ள ஆலூர் கிரிக்கெட் மைதானத்தில் அணியின் பயிற்சியாளர் கும்பளே, இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு 1 மணி நேர போட்டி நடத்தினார்.

இதில் ஷிகார்தவான் 2 முறை ஆட்டமிழந்தார், முரளி விஜய் போல்டானார்,

அடுத்து வந்த அணியின் தலைவர் கோஹ்லி வேகபந்துவீச்சுகள்(இஷாந்த்,சமி) அனைத்தையும் எளிதாக ஆடினார், ஆனால் சுழற்பந்து வீச்சில் தடுமாறினார், குறிப்பாக ரவீந்திர ஜடேஜா ஓவரில் மிகவும் தடுமாறினார், அவர் ஓவரிலையே போல்டும் ஆனார். அடுத்து ரோகுல் போல்டாக ,ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார்.

இதில் அஜிங்கியே ரஹானே மற்றும் புஜாரா இருவர் மட்டுமே 1 மணி நேரத்திற்கு மேலாக தாக்கு பிடித்தனர்.

இதற்கான காரணம் என்னவென்றால் ஐபில் முடிந்ததும் சீனியர் வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, அண்மையில் முடிந்த ஜிம்பாவே தொடரில் தோனி தவிர மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இதனால் சீனிய வீரர்களை ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிள் இருந்து டெஸ்ட் போட்டி மன நிலைக்கு கொண்டு வரவே இப்போட்டி நடத்தப்பட்டதாக அணியின் தலைமை பயிற்ச்சியாளர் அனில் கும்ளே கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments