கடைசி ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி அணி: கடின இலக்கை நிர்ணயித்தும் தோல்வியடைந்த குஜராத்

Report Print Santhan in கிரிக்கெட்

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷிரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால், டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-லின் 50-வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதின. இப்போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்றடெல்லி அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக சுமித் - இஷான் கிஷான் களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

முகமது ஷமி வீசிய 4-வது ஓவரில் சுமித் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சுரேஷ் ரெய்னா 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிதனாமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தினர்.

குஜராத் அணி 56 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அமித் மிஸ்ரா வீசிய 7-வது ஓவரில் இஷான் கிஷான் அவுட் ஆனார். அவர் 25 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய பிஞ்ச் தினேஷ் கார்த்திக்குடன் கைகோர்த்து அதிரடியாக விளையாடினர்.

குஜராத் அணி 17-வது ஓவரில் 148 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 40 ஓட்டங்களி எடுத்திருந்த போது பிராத்வெயிட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இதே ஓவரின் அடுத்த பந்தில் ஆரோன் பிஞ்ச் சிக்சர் அடித்து அரை சதம் அடித்தார்.

டெல்லி அணி வீசிய 18-வது ஓவரில் பிஞ்ச் அடுத்தடுத்து பவுண்டரி அடிக்க குஜராத் அணி அந்த ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது. முகமது ஷமி வீசிய 19-வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 69 ஓட்டங்கள் எடுத்தார்.

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்களாக சாம்சன் மற்றும் கருண்நாயர் களமிறங்கினர்.

துவக்க வீரரான சாம்சன்(10), அடுத்து வந்த ரிஷப் பாண்ட்(4) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

அதன் பின் கருண் நாயருடன் இணைந்த ஷிரேயாஸ் ஐயர் அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் டெல்லி அணியின் ரன் விகிதம் சீரான இடைவெளியில் எகிறியது.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இவர்களின் ஜோடியை பால்க்னர் பிரித்தார். கருண் நாயர் 30 ஓட்டங்களில் பால்க்னர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி வீரர்கள் உற்சாகமடைந்தனர். இருப்பினும் ஐயர் மட்டும் தனித்து நின்று அதிரடி காட்டி வந்ததால் டெல்லி அணி சற்று நம்பிக்கையில் இருந்தது.

இறுதியாக டெல்லி அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments