சாம்பியன் டிராபி தொடரில் எந்த வித குறைபாடும் இல்லாத அணி எது? விராட் கோஹ்லி பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் வரும் ஜுன் மாதம் 1-ஆம் திகதி சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி லண்டன் சென்றது.

இந்நிலையில் சாம்பியன் தொடர் குறித்து கூறுகையில், இங்கிலாந்து மிகமிக பேலன்ஸ் சைடு கொண்ட அணி. பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆகிய துறையில் சம பலனைக் கொண்டிருக்கும்.

உலகத்தின் சிறந்த இரண்டு அணிகளில் இங்கிலாந்தும் ஒன்று. 9 அல்லது 10-வது வீரர் வரை துடுப்பாட்டம் செய்வார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்வதில் ஒவ்வொரு அணிக்கும் கடும் சவாலாக இருக்கும்.

2015-ம் ஆண்டு உலகக்கிண்ணம் தொடருக்குப்பின் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி முற்றிலும் மாறியுள்ளது.

தற்போதைய நிலையில் அவர்கள் 330 ஓட்டங்களுக்கு குறைவாக சேர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களை எதிர்த்து விளையாடும் அனைத்து அணிகளுக்கும் உண்மையிலேயே சவாலாக இருக்கும்.

இந்த தொடரில் அவர்கள் நீண்ட தூரம் வரை செல்வார்கள். தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து அணியிடம் ஏதாவது குறை இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால், அப்படி எந்தவொரு குறையும் இல்லை.

அவர்கள் மிகவும் வலிமையாக இருக்கிறார்கள் என்று கூறுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments