2018 ஐபிஎல் ஏலம்: மொத்த எத்தனை வீரர்கள் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
492Shares
492Shares
ibctamil.com

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் போட்டி இந்தாண்டும் ஏப்ரல் மாதம் துவங்கி மே மாதம் முடிவடையவுள்ளது.

இதற்காக ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்டுள்ள வீரர்களின் பட்டியலை கடந்த 4-ஆம் திகதி தெரிவித்தது.

இந்நிலையில் ஐபில் வீரர்களுக்கான ஏலம் வரும் 27 மற்றும் 28 திகதிகளில் நடைபெறவுள்ளது, இதற்கான வீரர்கள் ஏலத்திற்கான பெயரை விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 12-ஆம் திகதி தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஐபில் ஏலத்திற்காக 1,122 வீரர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.1,122 வீரர்களின் பெயரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் அணிகளுக்கு அனுப்பப்பட்டது.

அந்த பட்டியலில் 281 சர்வதேச வீரர்களும், சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகாத 838 வீரர்களும் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்