அவர்களிடம் டாப் வீரர்கள் உள்ளார்கள்: தோல்விக்கு பின்னர் பேசிய அஸ்வின்

Report Print Raju Raju in கிரிக்கெட்
303Shares
303Shares
lankasrimarket.com

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்திய நிலையில் போட்டி குறித்து இரு அணித்தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் பெங்களூர் ராயல் சேலன்சர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இப்போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின்னர் பேசிய பெங்களூர் அணித் தலைவர் விராட் கோஹ்லி, உமேஷ் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தியதால் எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினோம். வாஷிங்டன் சுந்தர், வோக்ஸ் ஆகியோரும் சிறப்பாக பந்துவீச்னார்கள்.

கடந்த போட்டியில் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை இழந்த நிலையில் அதிலிருந்து பாடம் கற்று கொண்டோம் என கூறியுள்ளார்.

பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் கூறுகையில், இந்த போட்டியில் நாங்கள் போராடிய விதம் பெருமையாக உள்ளது.

பெங்களூர் அணியிடம் டாப் வீரர்கள் உள்ளதோடு, சிறந்த தலைமையும் உள்ளது, நான் இந்த போட்டியை ரசித்தேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்