ஆசிய கிண்ணம் தொடரிலிருந்து இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் விலகல்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கிண்ணத்திற்கான தொடருக்கான போட்டியிலிருந்து இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டன் தினேஷ் சந்திமால் விலகியுள்ளார்.

நடப்பாண்டிற்கான ஆசிய கிண்ணம் கிரிக்கெட் போட்டி தொடர், வரும் 15-ம் தேதி துவங்கி அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியினை மேற்கொண்டு வரும் நிலையில், இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், ஆசிய கோப்பை தொடரை நிச்சயமாக வெல்வோம் என எங்களால் உறுதியாக கூறமுடியாது.

ஆனால் எங்களுடைய வீரர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடினால் நிச்சயமாக மூன்று துறைகளிலும் வெற்றி பெற முடியும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் SLC T20 லீக் போட்டியின் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டன் தினேஷ் சந்திமால் ஆசிய கிண்ண தொடரிலிருந்து விலகுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers