இங்கிலாந்து அணியுடன் அடி வாங்கிய இந்தியா! துணை பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் துணை பீல்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் நுவன் சீனிவராத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டி மற்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் டி20 தொடரை மட்டும் இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

பலம் வாய்ந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மிகவும் மோசமாக தோல்வியடைந்ததால், பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இப்படி இங்கிலாந்து மண்ணில் மோசமான தோல்விகளை பதிவு செய்துள்ள இந்திய அணியால் ஆசிய கோப்பை மற்றும் அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியை வலுப்படுத்தும் முயற்சியில் பி.சி.சி.ஐ., இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் அணியின் புதிய துணை பீல்டிங் பயிற்சியாளராக நுவன் சீனிவராத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவன் சீனிவராத்னே இதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் 2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இந்திய அணியின் துணை பீல்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்று தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...