ஆசிய கோப்பை போட்டியில் கெத்து காட்டும் இலங்கை வீரர்கள்! பந்து வீச்சு பட்டியலில் யார் முதலிடம் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

ஆசியகோப்பைக்கான போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

இலங்கை, இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய ஆசிய அணிகள் பங்கேற்கும் ஆசியகோப்பைக்கான தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கவுள்ளது.

இதற்கான முதல் போட்டியில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்நிலை ஆசியகோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

சமிந்தா வாஸ்

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் 1995 முதல் 2008 வரை 19 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் இதில் அதிகபட்சமாக 30 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

லசித் மலிங்கா

இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா 12 போட்டிகள் ஆடி அதிகபட்சமாக 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் அதிகபட்சமாக 34 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

சயீத் அஜ்மல்

சமீபத்தில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் 28 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரின் பவுலிங் சராசரி 19.40 ஆகும். அதிகபட்சமாக 26 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

அஜந்தா மெண்டிஸ்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜந்த மென்டிஸ் 8 போட்டிகளில் மட்டும் விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இவரின் சாராசரி 10.42 ஆக உள்ளது. அதே சமயம் இவர் 13 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

முத்தையா முரளிதரன்

இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் 24 போட்டிகளில் 30 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இவர் 31 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் அதிகபட்சமாக வீழ்த்தியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers