7வது பந்தில் அவுட் ஆன வீரர்! நடுவரின் தவறான முடிவால் அதிர்ச்சி

Report Print Kabilan in கிரிக்கெட்

பிக் பாஷ் லீக் டி20 தொடரில் துடுப்பாட்ட வீரர் ஒருவர், பந்து வீச்சாளர் வீசிய 7வது பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சியுடன் வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பெர்த் ஸ்காச்சர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர் மைக்கேல் கிளிங்கர் 2வது ஓவரை வீசிய துவார்ஹியூஸின் பந்துவீச்சை எதிர்கொண்டார். 6 பந்துகள் வீசப்பட்ட நிலையில் 7வது பந்தை துவார்ஹியூஸ் வீசினார். அதனை எதிர்கொண்ட கிளிங்கர், 3rd மேன் திசையில் தூக்கி அடிக்க கேட்ச் ஆனார்.

ஆனால் இந்த கேட்ச் சர்ச்சைக்குரியதாக இருந்ததால் 3வது நடுவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பின்னர் அது கேட்ச் தான் என்று உறுதிபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கள நடுவர் ‘அவுட்’ என அறிவித்தார்.

ஏற்கனவே ஓவர் முடிந்துவிட்டதை அறியாமல் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். ஆனால், 3வது நடுவரிடம் அவுட் குறித்து கேட்டபோது தான் 7வது பந்தில் அவுட் ஆனதை துடுப்பாட்ட வீரர்கள் உணர்ந்தனர்.

எனினும், கள நடுவர் அவுட் என்று அறிவித்ததால் அதிருப்தியுடன் கிளிங்கர் வெளியேறினார். கிரிக்கெட் விதிப்படி 7வது பந்து அவுட் ஆவது செல்லாது. ஆனால், கள நடுவர் அதனை கவனிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பான்கிராஃப்டின் அதிரடியான ஆட்டத்தினால், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்