உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை இதுதான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முன்னிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் சென்னையில் உள்ள மால்கள் அனைத்தும், கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

நகரம் முழுவதும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள மால் ஒன்றில் 51 அடி நீளம், 6.6 டன் எடையுடன் கூடிய கிரிக்கெட் மட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை என்று கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முன்னிலையில் இந்த கிரிக்கெட் மட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக கபில் தேவ் கூறுகையில், ‘மிகப்பெரிய கிரிக்கெட் பேட் ஒன்றை வைத்து இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ள பலேடியம் மற்றும் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...