ஆபாச உடையுடன் மைதானத்திற்குள் புகுந்த பெண்: தடைபட்ட இங்கிலாந்து நியூசிலாந்து போட்டி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியானது ஆபாச உடையுடன் புகுந்த பெண்ணால் சில நிமிடங்கள் தடைபட்டுள்ளது.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் உலகக்கிண்ணம் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்த நிலையில் எலெனா வுலிட்ஸ்கி என்ற பெண்மணி ஆபாச இணைய தளம் ஒன்றின் முகவரி பொறிக்கப்பட்ட முகம் சுழிக்கவைக்கும் ஆடையுடன் மைதானத்திற்குள் புகுந்துள்ளார்.

கறுப்பு நிற ஆடையில் Vitaly Uncensored என பொறிக்கப்பட்டிருந்தது. இந்த இணையதளமானது எலெனாவின் மகனான விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி என்பவரது என கூறப்படுகிறது.

மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹாம் அணிகளுக்கு இடையே நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியின்போது,

கின்சி வோலன்க்சி என்பவர் இந்த இணையதளத்தின் பெயர் பொறித்த ஆடையுடன் மைதானத்திற்குள் புகுந்து மொத்த இளைஞர்களின் கவனத்தையும் தன்மீது ஈர்த்துக்கொண்டார்.

இது உலக அளவில் Vitaly Uncensored நிறுவனத்திற்கு பெரும் விளம்பரத்தை தேடித்தந்தது.

விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கியின் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்திற்கு 1.6 பில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers