இதுவரை விண்ணப்பிக்காத ஜெயவர்தனே.. பயிற்சியாளர் பதவிக்கு குவிந்த விண்ணப்பங்கள் எத்தனை தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, இதுவரை 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே, புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. அதனைத் தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இலங்கையின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளருமான மகிளா ஜெயவர்தனே, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவர் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

PTI

பெங்களூர் மிரர்ஸ் எனும் பத்திரிகையின் அறிக்கையின்படி, தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சவால் விடக்கூடிய வகையிலான நபருக்கு பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அவுஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டர் டாம் மூடி, நியூசிலாந்தின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், இந்தியாவின் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுவரை 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அனைத்து பெயர்களையும் மதிப்பீடு செய்ய பி.சி.சி.ஐ அதிக நேரம் எடுக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்