தன்னை மறந்து குதூகலமாக ஆர்ப்பரித்த கோஹ்லி.. வைரலாகும் வீடியோ!

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா அரைசதம் விளாசியதைப் பார்த்து, அணித்தலைவர் விராட் கோஹ்லி உற்சாகமாக கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 416 ஓட்டங்கள் குவித்தது.

தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 55 ஓட்டங்களிலும், கோஹ்லி 76 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்த நிலையில், ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்த பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

தனது விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்ட இஷாந்த், டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அதுவும் 69 பந்துகளிலேயே அரைசதம் அடித்த அவர், 80 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.

முன்னதாக, இஷாந்த் ஷர்மா 50வது ரன்னுக்காக ஓடியபோது பெவலியனில் இருந்த விராட் கோஹ்லி, தன்னை மறந்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்.

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இஷாந்த் ஷர்மாவிடம் இருந்து இப்படி ஒரு ஆட்டத்தை எவரும் எதிர்பார்க்கவில்லை என்பதால் தான் இத்தனை மகிழ்ச்சியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்